வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஏணி, தோனி

                                    ஏணி, தோணி 
கைபிடித்து ,
 காலூன்றி ,
 மெல்ல மெல்ல ஏறி 
ஏற்றம் கண்டபின் ...

ஏன் நீ ?

என 
எட்டி உதைக்க
காப்பகங்களில்
கண்ணீருடன் கதியற்றுக் கிடக்கின்றன ....


சில அம்மா ஏணிகளும்,
பல அப்பா தோணிகளும்

2 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

ஏறும்
ஏணியாய் தானும் மாறுவோம்
என்று ஏறியவன் மறந்து விடுவதால்
எட்டி உதைக்கறான்
பல மகன்களும்
பல மருமகள்களும்..

காந்தி பனங்கூர் சொன்னது…

வாழ்க்கையின் படிக்கட்டுகள் தான் அப்பா அம்மா, அவர்களை வணங்க வேண்டும். அதற்கு மாறாக பலர் மிதித்து செல்கின்றனர்.

தாய் தந்தையை பற்றிய கவிவரிகள் அருமை வாத்தியாரே.